லாரிகள் ஓடாததால்சேலம் மாவட்டத்தில் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்புசம்மேளன தலைவர் தனராஜ் தகவல்


லாரிகள் ஓடாததால்சேலம் மாவட்டத்தில் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்புசம்மேளன தலைவர் தனராஜ் தகவல்
x

லாரிகள் ஓடாததால் சேலம் மாவட்டத்தில் ரூ.1 கோடி வர்த்தகம் பாதித்து உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் கூறினார்.

சேலம்

சேலம்

லாரிகள் ஓடாததால் சேலம் மாவட்டத்தில் ரூ.1 கோடி வர்த்தகம் பாதித்து உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் கூறினார்.

முழு அடைப்பு போராட்டம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் முழுவதும் கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கூறி கன்னட அமைப்புகள் சார்பில் நேற்று கர்நாடகாவில் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை. இதனால் சத்திரம் லாரி மார்க்கெட், கந்தம்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட மாநகரில் பல இடங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் தனராஜிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

வர்த்தகம் பாதித்து உள்ளன

கர்நாடகாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு இன்று (நேற்று) லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் லாரிகள் நேற்று ஓடவில்லை. சரக்குகள் ஏற்றிச்சென்ற பல லாரிகள் கர்நாடக மாநில எல்லை பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த பிரச்சினை முடியும் வரை இரவு நேரங்களில் லாரிகளை கர்நாடக மாநிலத்திற்கு இயக்க கூடாது என்று டிரைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மேலும் பகல் நேரங்களிலும் கர்நாடக மாநிலத்திற்கு லாரிகளை டிரைவர்கள் பாதுகாப்பாக இயக்க வேண்டும். நாளை (இன்று) கர்நாடக மாநிலத்திற்கு லாரிகள் இயக்கப்படும். லாரிகள் ஓடாததால் மாநிலம் முழுவதும் ரூ.6 கோடியும், சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1 கோடியும் வர்த்தகம் பாதித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story