டிராக்டர் திருட்டு


டிராக்டர் திருட்டு
x
தினத்தந்தி 21 March 2023 12:15 AM IST (Updated: 21 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடம் அருகே டிராக்டர் திருடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் அருகே உள்ள உடப்பன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47). விவசாயி இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் டிராக்டர் மூலம் விவசாய பணிகளை முடித்துவிட்டு வந்து இரவில் வீட்டின் அருகில் டிராக்டரை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் விவசாய பணிக்காக டிராக்டர் எடுக்க வரும்போது டிராக்டரை காணவில்லை. அதை மர்ம நபர் திருடிச் சென்றது ெதரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தேடிவருகிறார்கள்.


Next Story