ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஊட்டி
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மலர் கண்காட்சி
நீலகிரி, இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களில் நீலகிரி மாவட்டம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் வாயிலாக கண்காட்சி நடந்தது. மக்கள் வீட்டில் இருந்தபடி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண செடிகளை கண்டு ரசித்தனர்.
தற்போது தொற்று முழுவதும் குறைந்து சுற்றுலா பயணிகள் வருகையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி 20-ந்தேதி தொடங்கியது. வருகிற 24-ந் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மலர் மாடங்களை பார்வையிட்டார்.
கூட்டம் அலைமோதியது
இதற்கிடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் வராமல் இருந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தினம் விடுமுறை அன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்தது. மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தொட்டிகளில் இருந்த மரங்களைப் பார்த்து ரசித்தனர். மேலும் செல்வி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதேபோல் தாவரவியல் பூங்கா புல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதையும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கிய 21-ந் தேதி 12 ஆயிரம் பேரும், நேற்று முன்தினம் 19 ஆயிரம் பேரும் நேற்று சுமார் 25 ஆயிரம் பேரும் மலர் கண்காட்சியை பார்வையிட்டனர். இதேபோல் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்பட பல்வேறு இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. ஊட்டி படகு இல்லத்தில் நேற்று இதமான காலநிலையை அனுபவித்தவாறு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நேற்று மட்டும் சுமார் 11,000 பேர் கூட்டத்திற்கு வருகை தந்தனர். சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததாலும், முதல்-அமைச்சர் மூட்டி பயணம் காரணமாகவும் நேற்று ஊட்டி நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்து நின்றன.
சேறும் சகதியுமாக மாறி தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பச்சை பசேலென்ற புல்வெளியையும், பூத்து குலுங்கும் மலர்களையும் கொண்டு இருந்தது. இதனால் அதை கண்டு கழிக்க சுற்றுலாப் பயணிகள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக நேற்று பூங்காவில் இருந்த புல்வெளி நாசமானது. பார்க்கும் இடமெல்லாம் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் குழந்தைகள் வயதானவர்கள் பெண்கள் கடும் அவதிப்பட்டனர்.