புதுக்கோட்டை சந்தையில் தக்காளி கிலோ ரூ.140-க்கு விற்பனை


புதுக்கோட்டை சந்தையில் தக்காளி கிலோ ரூ.140-க்கு விற்பனை
x

புதுக்கோட்டை சந்தையில் தக்காளி கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை சமீபத்தில் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இதில் தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தபடி உள்ளது. புதுக்கோட்டை சந்தைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.20 வரை விற்றது. சரக்கு வேன்களிலும், சந்தைகளிலும் தக்காளி விற்பனை கூவி, கூவி நடைபெற்றது. இந்த நிலையில் வரத்து குறைவால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.130 வரை சமீபத்தில் விற்றது.

புதுக்கோட்டை சந்தைபேட்டை வாரச்சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்பனையானது. தக்காளியும் குறைந்த அளவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. தக்காளியின் விலையை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தேவைக்கேற்ப குறைவாக தக்காளியை வாங்கி சென்றதை காணமுடிந்தது. இதேபோல் சின்ன வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ.140 ஆக உயர்ந்து விற்றது. தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story