டீசல் விலை குறைந்ததால் தக்காளி விலை குறைய வாய்ப்பு - கோயம்பேடு வியாபாரிகள் தகவல்


டீசல் விலை குறைந்ததால் தக்காளி விலை குறைய வாய்ப்பு - கோயம்பேடு வியாபாரிகள் தகவல்
x

பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளதால் தக்காளி விலையும் குறைய வாய்ப்புள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அங்கு இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி மொத்த வியாபார கடைகளில் 100 ரூபாய்க்கும், சில்லறை விற்பனை கடைகளில் 120 ரூபாய்க்கும் விற்பனை ஆகி வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளதால், லாரி வாடகை கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தக்காளி விலையும் கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story