போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவாரூர்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நேற்று நன்னிலம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் போதைப்பொருள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் கட்டப்பட்டு ஊர்வலமாக வந்தன. நன்னிலம், மாப்பிள்ளை குப்பம், திருவாஞ்சியம், அச்சுதமங்கலம் உள்ளிட்ட ஊர்கள் வழியாக இந்த ஊர்வலம் நடந்தது. இதில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார், ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story