திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மத்திய, மாநில அரசு விருது


திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மத்திய, மாநில அரசு விருது
x

திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மத்திய, மாநில அரசு விருது வழங்கப்பட்டது.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரி கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் அவசர கால சிகிச்சை, தலைக்காய சிகிச்சை, பிரசவவார்டு, காய்ச்சல், சிறப்பு வார்டுகள், ரத்த சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி தாலுகாக்கள் அடங்கிய அரசு பொது மருத்துவமனையாகவும் உள்ளது. அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் உள்ளிட்ட 18 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய லட்ஷியா விருதினை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த விருது பிரசவ வார்டில் அமைந்துள்ள பல்வேறு வசதிகள் குறித்து சிறப்பாக உள்ளதாக சென்னையில் நடைபெற்ற விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விருதினை வழங்கினார். முன்னதாக இதற்கான மத்திய அரசு குழு ஆய்வு செய்து விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் விருதுடன் சேர்த்து ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதே போல முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிறந்த மருத்துவமனையாக மதுரை மாவட்டத்தில் தாலுகா மருத்துவமனைகளில் திருமங்கலம் அரசு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 338 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. இதற்காக தமிழக அரசு சிறந்த மருத்துவமனைக்கான விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இரட்டை விருது கிடைத்ததை தொடர்ந்து திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவர் ராம்குமார் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story