உரிமை தொகைக்கு பதிவு செய்யதிருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்கள்


உரிமை தொகைக்கு பதிவு செய்யதிருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
x

உரிமை தொகைக்கு பதிவு செய்ய திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பெண்கள் குவிந்தனர்.

மதுரை

திருமங்கலம்,

தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை அறிவித்து தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கடந்த சில நாட்களாக வங்கிகளில் அவர்களுடைய கணக்கிற்கு பணம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இ-சேவை மையங்களில் அணுகி உரிமைத்தொகைக்கு மறு சீராய்வு செய்து அவர்களுக்கு தகுதி இருப்பின் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களால் தகுதியான பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றால் அதற்குரிய காரணத்தையும் தெரிவித்து சரியாக இருந்தால் பணம் ஏற்றுவதற்கான வழிமுறைகளை செய்து வருகிறார்கள். இதற்காக நேற்று பெண்கள் கூட்டம் அலைமோதியது. வருவாய்த்துறை அலுவலர்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெண்களுக்கு உரிமை தொகை விடுபட்டவர்கள் குறித்து வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், பெண்களுக்கு உரிமை தொகை கிடைக்கப் பெறாதவர்கள் ஆதார் கார்டை வைத்து சரிபார்க்கும் போது சிலருக்கு ஏற்கப்பட்டுள்ளது என வந்தால் பணம் உறுதியாக வந்துவிடும். ஏற்கப்படவில்லை.அதற்கான காரணங்கள் இருப்பின் அவர்களுக்கு பணம் வருவது சிரமம் என தெரிவித்தார்.


Next Story