குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோலமிட்டு பூக்கள் தூவி விழிப்புணர்வு


குப்பைகள் கொட்டுவதை தடுக்க  கோலமிட்டு பூக்கள் தூவி விழிப்புணர்வு
x

பெரியகுளம் நகராட்சியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோலமிட்டு பூக்கள் தூவி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

தேனி

பெரியகுளம் நகராட்சி 6-வது வார்டில் கல்லார் ரோடு உள்ளது. இங்கு 2 இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கு நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டது. இந்த தொட்டிகளில் தினந்தோறும் குப்பைகள் சேருவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இதையடுத்து குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டது. பின்னர் வண்டிகள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அதே இடத்தில் குப்பைகளை பொதுமக்கள் கொட்டினர்.

இதனை தடுக்கும் வகையில் கவுன்சிலர் லட்சுமி தலைமையில் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் அங்கு கிடந்த குப்பைகளை அகற்றி விட்டு சுத்தப்படுத்தி, தூய்மை இந்தியா, பெரியகுளம் நகராட்சி, குப்பைகளை கொட்டாதீர் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி கோலமிட்டனர். பின்னர் பூக்கள் தூவி அந்த இடத்தை அலங்கரித்தனர்.


Next Story