திருப்பத்தூர்: ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக பரவிய தகவல் - பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


திருப்பத்தூர்: ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக பரவிய தகவல் - பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x

பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாகக் கூறி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட பச்சூர் பகுதியில் அமைந்திருக்கும் ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம் செய்யப்படுவதாக தகவல் பரவியுள்ளது. இதையடுத்து ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தாசில்தார் குமார் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக யாரோ வதந்தி பரப்பியுள்ளதாகவும், நல்ல அரிசி தான் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story