திருப்பத்தூர்: தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த கார் - மாணவர்கள் 2 பேர் பலி


திருப்பத்தூர்: தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த கார் -   மாணவர்கள் 2 பேர் பலி
x

நாட்டறம்பள்ளி அருகே சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

ஜோலார்பேட்டை,

கர்நாடக மாநில பெங்களூரு சஞ்சய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல். இவரது மகன் சக்திவேல்(வயது 20)இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

மற்றும் இவரது நண்பர் விவேகானந்தர் தெருவை சேர்ந்த கிறிஸ்துராஜா மகன் ராஜ்குமார்(வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.இருவரும் நண்பர்கள்.

இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் மற்றொரு நண்பர் டீக்கடை நடத்தி வரும் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்வரின் பிள்ளைகளின் காதணி விழா சேத்துப்பட்டு பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க கர்நாடக மாநில பெங்களூருவில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி காரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கிருஷ்ணகிரி வேலூர் நோக்கி செல்லும் மார்க்கத்தில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே ஆத்தூர் குப்பம் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது கார் ஓட்டிச் சென்ற சக்திவேல் நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி எதிர் திசை சாலையில் அருகேயுள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்ததது.

இதில் காரில் பயணம் செய்த இரண்டு பேரும் பலத்த படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அங்கிருந்தவர்கள் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்தவர்ளை மருத்துவமனையில் டாக்டர் பரிசோதித்து போது அவர்கள் இருவரும் வரும் வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story