திருநறையூர் ராமநாதசாமி கோவில் குடமுழுக்கு


திருநறையூர் ராமநாதசாமி கோவில் குடமுழுக்கு
x

திருநறையூர் ராமநாதசாமி கோவில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

திருநறையூர் ராமநாதசாமி கோவில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

ராமநாத சாமி கோவில்

கும்பகோணம் அருகே திருநறையூர் கிராமத்தில் அமைந்துள்ள பர்வத வர்த்தினி சமேத ராமநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனி பகவான், மந்தாதேவி, ஜேஷ்ட்டா தேவி, என இரு மனைவிகள் மாந்தி, குளிகன் ஆகிய இருமகன்களுடன் காகம் வாகனம், கொடிமரம், பலி பீடங்களுடன் தனி சன்னதி கொண்டு மங்கள சனி பகவானாக அருள் பாலித்து வருகிறார்.

இந்த ஆலயத்தில் உலக மக்கள் நலம் பெற வேண்டி தசரத சக்கரவர்த்தி வழிபாடு செய்துள்ளார். பல்வேறு சிறப்புடைய இந்த கோவிலில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

குடமுழுக்கு

முன்னதாக கடந்த 22-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது நேற்று அதிகாலை 4-ம் கால யாகசாலை பூஜை நிறைவில், நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள், முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், சிவாச்சாரியார்கள் புனித நீர் நிரப்பிய கடங்களில் இருந்த புனித நீரை ஊற்ற, குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் , சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். குடமுழுக்கில் கோவில் அர்ச்சகர் ஞானசேகர சிவாச்சாரியார், நடார் கந்தசாமி குருக்கள், சமத்துனார்குடி விஸ்வநாத குருக்கள், திருத்துறைப்பூண்டி மனோஜ் சிவாச்சாரியார், அழகாபுத்தூர் ராஜா சிவம் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் மற்றும் உதவி ஆணையர் ராணி, தக்கார் அருணா ,செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் திருநறையூர் ஊராட்சி தலைவர் ரமாமணி, வசந்த மாளிகை நெல்லை ரமேஷ் கண்ணன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். ராஜா, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் வி. எஸ். ஆர். மகேஷ், நாச்சியார் சிட்ஸ் சாரதி, திருநறையூர் ஊராட்சி செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story