பொன்வாசிநாதர்-சொர்ணாம்பிகைக்கு திருக்கல்யாணம்


பொன்வாசிநாதர்-சொர்ணாம்பிகைக்கு திருக்கல்யாணம்
x

சித்திரை திருவிழாவையொட்டி இலுப்பூர் பொன்வாசிநாதர்-சொர்ணாம்பிகைக்கு திருக்கல்யாணம் நேற்று இரவு நடந்தது. தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

புதுக்கோட்டை

சித்திரை திருவிழா

இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சுவாமி- அம்பாள் உள்ளிட்ட மூலவர் மூர்த்திகளுக்கு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு அலங்காரமும், அபிஷேக, ஆராதனைகளும் நடந்தது.

காலை மாலை இரு வேளைகளிலும் பொன்வாசிநாதர், சொர்ணாம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்கார பல்லக்கில் நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலாவும் நடந்து வருகிறது. நேற்று இரவு கோவிலில் பொன்வாசிநாதர்-சொர்ணாம்பிகைக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

திருக்கல்யாணம்

இதையொட்டி இலுப்பூர் கல்யாண வெங்கடேசப்பெருமாள் கோவிலிலிருந்து சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. பின்னர் பொன்வாசிநாதர்-சொர்ணாம்பிகைக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து பெருமாள் சுவாமி முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மாகா தீபாராதனை நடந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் ஊர்பொதுமக்களும் செய்திருந்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.


Next Story