வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

திருச்சி ராம்ஜிநகர் சின்னகொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதன் என்ற மதனபாலன் (வயது 30). பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 21 கிலோ கஞ்சாவை பதுக்கி விற்பனைக்காக எடுத்து சென்றபோது, அவரை ராம்ஜிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தார். அதனை தொடர்ந்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதற்கான நகலை சிறையில் உள்ள மதனபாலனிடம் சிறை காவலர்கள் வழங்கினர்.


Next Story