நரசிம்மசாமி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி


நரசிம்மசாமி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி
x

நாமக்கல் நரசிம்ம சாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய் சமர்பித்து வழிபாடு செய்தனர்.

நாமக்கல்

திருக்கல்யாணம் நிகழ்ச்சி

நாமக்கல் நரசிம்ம சாமி கோவில் தேர்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

தேர்திருவிழாவை முன்னிட்டு நேற்று நாமக்கல் நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் சாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நரசிம்மர் மற்றும் அரங்கநாதருக்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பட்டாச்சாரியர்கள் திருமணம் நடத்தி வைத்தனர்.

பக்தர்கள் மொய் சமர்பித்தனர்

தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் இறைவனுக்கு மொய் சமர்பிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மொய் சமர்பித்து சாமியை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் இளையராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் நரசிம்ம சாமி தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் ஆஞ்சநேயர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.


Next Story