ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்


ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 1 March 2023 6:45 PM GMT (Updated: 1 March 2023 6:45 PM GMT)

ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் உள்ள சதுர்வேத மங்கலம் ஆத்மநாயகி அம்பாள் உடனுறை ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் மாசிமகா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 10 மணி அளவில் இறைவன் இறைவிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது.

கோவில் சிவாச்சாரியார் மற்றும் ஓதுவார் பூஜகர்கள் குழுவினர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இதைதொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலையில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் இன்று(வியாழக்கிழமை) சமணர்களுக்கு சாப விமோசனம் ஏற்படுத்தும் கள்வன் திருவிழா நடைபெறுகிறது. 5-ந் தேதி மாலை 3.30 மணியளவில் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் தலைமையில் தேர் வடம் பிடித்து தேர் நான்கு ரத வீதியில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னர் தீர்த்தவாரி உற்சவ விழா நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது. 10-ம் நாளான தீர்த்தவாரியில் மாபெரும் புகழ் பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு திருவிழா நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஐந்து வகை கோவில் திருக்கோவில் தேவஸ்தானம் மற்றும் எஸ்.வி.மங்கலம் கிராமத்து மக்கள் செய்து வருகிறார்கள்.


Next Story