பா.ஜ.க.- பா.ம.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை -மதுரை ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பேச்சு


பா.ஜ.க.- பா.ம.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை -மதுரை ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பேச்சு
x

பா.ஜ.க.- பா.ம.க. உடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார்.

மதுரை


பா.ஜ.க.- பா.ம.க. உடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை புதூர் பஸ் நிலைய பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாதிய வன்முறை சம்பவங்களை கண்டித்தும், சாதிய ஆணவப்படுகொலைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை திருமோகூரில் நடந்த சாதிய வன்முறையை கண்டித்து ஒத்தக்கடை பகுதியில் நடத்தினால் பதற்றம் உருவாகும் என்ற நோக்கத்தில் தான் மதுரை மாநகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதனை மற்ற சமூகத்தினரும் புரிந்து கொள்ள வேண்டும். திருமோகூரில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வருகை தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கூறினர். ஆனால், நான் அங்கு சென்றால் தேவையற்ற பதற்றம் உருவாகும். இதனால், உழைக்கும் மக்கள் இரு தரப்பிலும் இருக்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அங்கு செல்லவில்லை.

ஒரு சிலர் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த கிராமத்திற்கு எதிராக திரும்பிவிடுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள். கிராம புறங்களில் கஞ்சா அதிகமாக புழங்கி வருகிறது. இதனால் தான் வன்முறை சம்பவங்கள் நடக்கிறது. திருமோகூரில் நடந்ததும் அதுதான்.

அரசியல் உள்நோக்கம்

தமிழகம் முழுவதும் இதுபோன்று ஒரு சில போதை இளைஞர்கள், கும்பல்களால் தான் பிரச்சினை நடக்கிறது. காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுத்தால், இரு தரப்பு சமூக மோதலை தடுக்கலாம். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை. இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர், தமிழக அரசுக்கு எதிராக, முதல்-அமைச்சருக்கு எதிராக என கூறுவார்கள். அதனை கண்டுகொள்ள கூடாது. தி.மு.க.விற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்படுத்த பார்க்கிறார்கள். நாங்கள் சாதிய கட்சி அல்ல. ஜனநாயக கட்சி.

பா.ஜ.க.- பா.ம.க. கூட்டணி

விடுதலைசிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் கூட அதிக உயரத்திற்கு ஏற்றினால் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு பா.ம.க. தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கும் மனநிலையில் உள்ளனர். கொடி கம்பம் ஏற்ற விடாமல் போராட்டம் நடத்துங்கள் என்று பா.ம.க. தலைவர்கள் கூறுகின்றனர். வன்னிய சமூக மக்கள் ஏதோ ஒரு தூண்டுதலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

தமிழகத்தில் காதல் தி்ருமணங்களுக்கு நான் தான் காரணம் என்கிறார்கள். நான் பிறப்பதற்கு முன்பாக காதல் திருமணங்கள் நடைபெறவில்லையா?.. தமிழகத்தில் சாதிய அமைப்புகளை அரசியல் கட்சியாக மாற்றியது ராமதாஸ் தான். தர்மபுரி வன்முறைக்கு காரணம் ராமதாஸ் தான்.

அரசியல்சூனியம் ஏற்படுத்தினாலும் பா.ஜ.க.வோடு, பா.ம.க.வோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழகத்தில் 25 இடத்தை பிடிப்போம் என அமித்ஷா கூறியுள்ளார். இதில் சூது, சூழ்ச்சியை எடுத்துவருவார்கள். சனாதன சக்திகளை தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்து விரட்ட வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி இருப்பது போல், இந்தியா முழுவதும் பா.ஜ.க.விற்கு எதிராக கூட்டணிகள் அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story