மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் வந்தடைந்தது.


மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் வந்தடைந்தது.
x

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் வந்தடைந்தது உள்ளது.

கரூர்

கரூர் வந்தடைந்தது

மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் நேற்று நள்ளிரவு சுமார் 3 மணி அளவில் கரூர் மாவட்ட எல்லையான நொய்யல் வழியாக தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலம் அருகே வந்து சேர்ந்தது. குறைந்த அளவில் அதிவேகமாக வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்ந்து தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி வரை சென்றது. அதிகாரிகள் மண் திட்டு அமைத்து தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாமல் தடுத்தனர். காவிரியாற்றின் இருகரையையும் தொட்டுச் சென்றது. கடல் போல் காட்சி அளித்தது.

1¼ லட்சம் கனஅடி தண்ணீர்

நன்செய் புகழூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு வரும் நிலையில் கதவணை கட்டுவதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே நன்செய் புகளூர் முதல் நாமக்கல் மாவட்டம் அனிச்சம் பாளையம் வரை கதவனை கட்டுவதற்கு போடப்பட்டிருந்த கான்கிரீட்டில் உள்ள கம்பிகள் மூழ்கி சிறிது அளவு கம்பிகள் மட்டுமே தெரிந்தது.

காவிரி ஆற்றில் சுமார் 1¼ லட்சம் கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் கரூர் -சேலம் செல்லும் பழைய காவிரி ஆற்று பாலத்திலும், சேலம்- கரூர் செல்லும் புதிய காவிரி ஆற்று பாலத்திலும் அந்த வழியாக காரில் செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்வார்கள் தங்களது வாகனங்களை காவிரி ஆற்றுப் பாலத்தில் நெடுகிலும் நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் காவிரி ஆற்றுப் பாலத்தில் நின்று செல்பி எடுத்தும், அதிசயத்துடன் பார்த்தும் செல்கின்றனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர், கிழக்கு தவிட்டுப் பாளையம், மேட்டுப்பாளையம் வரையிலான காவிரி கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, நீச்சல் பழகவோ கூடாது. மீனவர்கள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மீன் பிடிக்கவும், விவசாயிகள் கால் நடைகளை குளிப்பாட்டுதல், மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கும், காவிரி ஆற்றை கடந்து செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளதாக புகழூர் தாசில்தார் மோகன்ராஜ், பொதுப்பணித்துறையினர், மற்றும் வருவாய்த்துறையினர் தண்டோரா மற்றும் ஒலிப்பெருக்கி மூலமும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் காவிரியாற்றுக்கு செல்லும் வழித்தடத்தில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேட்டூர் அணையில் இருந்து திறந்து விட்டப்பட்ட தண்ணீர் நேற்று மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது. இதனால் மாயனூர் கதவணை கடல்போல் காட்சியளித்தது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றுக்கு திறந்து விடபடுகிறது.


Next Story