வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் குறைந்தது


வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் குறைந்தது
x

வெம்பக்கோட்டை அணையில் நீர் மட்டம் குறைந்தது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அணையில் நீர் மட்டம் குறைந்தது.

வெம்பக்கோட்டை அணை

சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் கடந்த ஒரு மாதம் கடும் வெப்பம் காரணமாக நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

கடந்த மாதம் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 18 அடியாக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் வழக்கத்திற்கு மாறான கடும் வெப்பம் காரணமாக வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஒரு மாதத்தில் 4 அடி வரை குறைந்து தற்போது அணையின் நீர்மட்டம் 14 அடியாக உள்ளது.

நீர் மட்டம் குறைவு

ஆவணி மாத கடைசியில் வெம்பக்கோட்டை அணையில் இருந்து வல்லம்பட்டி கண்மாய், நென்மேனி கண்மாய், மற்றும் இடது கால்வாய், வலது கால்வாய், வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். அணையில் நீர்மட்டம் குறைவு காரணமாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோடை மழையும் பெய்யாததால் விவசாயிகள் உழவு செய்யும் பணியை மட்டுமே தொடங்கியுள்ளனர். பாத்தி கட்டுதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. மழை பெய்தால் மட்டுமே விவசாய பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என விவசாயிகள் கலவையுடன் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story