அரசு கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகம் முற்றுகை

அரசு கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகம் முற்றுகை
x

அரசு கையகப்படுத்திய இடத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடத்தின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

அரசு கையகப்படுத்திய இடத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடத்தின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இழப்பீடு

தஞ்சாவூரில் இருந்து மானாமதுரை வரை தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாக சாலை அகலப்படுத்தும் பணிக்காக தனியார் நிறுவனம் மூலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் பகுதியில் இருந்த 45 சென்ட் இடத்தை கடந்த 2016-ம் ஆண்டு அரசு கையகப்படுத்தியது. இந்த இடம் 9 பேருக்கு சொந்தமானது.

இந்த இடத்திற்கு அரசு ரூ.67 லட்சத்து 65 ஆயிரத்து 396 வழங்க வேண்டும். இடம் கையகப்படுத்தி 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

போராட்டம்

இதனால் இழப்பீடு கிடைக்கப் பெறாதவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பெரோஸ் காந்தி தலைமையில் சிவகங்கை பெரியார் நகரில் உள்ள தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தார் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் தனி வட்டாட்சியர் மகாதேவன், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story