ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது - பக்தர்கள் அதிர்ச்சி


ராமேசுவரத்தில்  கடல் உள்வாங்கியது - பக்தர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 29 May 2022 3:08 AM GMT (Updated: 29 May 2022 11:10 AM GMT)

ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல் உள்வாங்கியதால் புனித நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல் உள்வாங்கியது.

சூறாவளி காற்று

ராமேசுவரம் பகுதியில் கடந்த சில வாரங்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல்சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல் பகுதியில் நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது.

இதனால் கடலில் உள்ள பாறை மற்றும் பவளப்பாறைகள், பாசிகள், சிப்பிகள் உள்ளிட்டவைகள் தெளிவாக வெளியே தெரிந்தன. இதை அங்கு நீராட வந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் மற்றும் பக்தர்களும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்ததுடன் செல்போனிலும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இயல்பு நிலைக்கு திரும்பியது

அதுபோல் மீன்பிடி துறைமுக கடல் பகுதியிலும் பல அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. உள்வாங்கி காணப்பட்ட அக்னிதீர்த்த கடல் பகுதியில் பகல் 11 மணிக்கு பிறகு மீண்டும் கடல் நீர் ஏறிய நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பியது. வழக்கமாக இதுபோன்று காற்று வீசும் சீசனில் அக்னிதீர்த்த கடல் பகுதி முதல் துறைமுக கடல் பகுதி வரையிலும் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமான ஒன்றுதான் என மீனவர்கள் தெரிவித்தனர்.


Next Story