41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணையிட சாலை பணியாளர்கள் கோரிக்கை


41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணையிட சாலை பணியாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2023 6:30 PM GMT (Updated: 12 Jun 2023 7:39 AM GMT)

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணையிட சாலை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் கோட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 8-வது மாநாடு பாடாலூர் அன்னை நகரில் நடந்தது. மாநாட்டிற்கு சங்கத்தின் கோட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். தீர்மானங்களை முன்மொழிந்து சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் பேசினார். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் மகேந்திரன், பொருளாளர் தமிழ் ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5,200, ரூ.20,200, தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும். ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி வழங்க வேண்டும். இறந்தோரின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலைத்துறையிலேயே பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story