நீடாமங்கலத்தில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும்


நீடாமங்கலத்தில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும்
x

நீடாமங்கலத்தில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும்

திருவாரூர்

நீடாமங்கலத்தில் பாலம் கட்டும் பணி நடந்து வருதால் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெருக்கடி

நீடாமங்கலத்தில் தினமும் ெரயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. நீடாமங்கலத்தில் ெரயில்வே கேட் மூடப்பட்டுள்ள நேரங்களில் வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வரும் பஸ்கள் பழைய நீடாமங்கலம் பாலத்தை பயன்படுத்தி நீடாமங்கலத்திற்குள் வந்து தஞ்சாவூர், திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றது. இவ்வாறு வந்தாலும் போக்குவரத்து நெருக்கடியில் தான் அந்த வாகனங்கள் சிக்குகின்றன.

பாலம் கட்டும் பணி

தற்போது நீடாமங்கலம் அருகே கோரையாற்றின் குறுக்கே பூவனூர் தட்டி மற்றும் கொத்தமங்கலம் கிராமத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் பணி முடிந்தவுடன் மன்னார்குடி சாலையை இணைக்கும் வகையில் அமைவதால் பாலத்தை மாற்றுப்பாதையாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. அந்த பாலத்தை அடைய நீடாமங்கலத்தில் சர்வமான்ய அக்ரஹாரம், கீழராஜவீதி, மருத்துவமனை சாலை, நீதிமன்ற சாலை வழியாக வாகனங்கள் சென்று வர ஏதுவாக அந்த சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story