பண மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் வீட்டை பொதுமக்கள் முற்றுகை


பண மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் வீட்டை பொதுமக்கள் முற்றுகை
x

பண மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கரூர்

வேலாயுதம்பாளையம் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து அதிக வட்டி தருவதாக கூறி டெபாசிட் தொகையாக சுமார் ரூ.5 கோடி வரை பெற்று ஏமாற்றிய புகாரில் 3 மாதங்களுக்கு முன்பு நிதி நிறுவன உரிமையாளர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளிவந்து உள்ளனர். இதில், விஜயகுமார், விவேக் ஆகியோர் சிவபார்வதி பைனான்ஸ் மூலம் தான் பண மோசடி செய்துள்ளதாக கூறி பங்குதாரர்கள் மற்றும் பணம் முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் விஜயகுமார் என்பவரது வீட்டை முற்றுகையிட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், ரெங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 2 மாதங்களுக்கு முன்பே பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை 2 மாதங்களில் திருப்பி தருவதாக விஜயகுமார் கூறியதாகவும், தற்போது வரை பணத்தை திருப்பி தரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்கள். இதனையடுத்து விஜயகுமார் விரைவில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story