காய்கறிகள் விலை 'கிடு கிடு' உயர்வு


காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு
x

வரத்து குறைவினால் காய்கறிகளின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.

விருதுநகர்

வரத்து குறைவினால் காய்கறிகளின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.

விலை விவரம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கடந்த வாரத்தை விட தற்போது காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்கப்பட்டது. நேற்று ரூ.80-க்கு விற்பனை ஆனது. அதேபோல ஒரு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் தற்போது ரூ.120 ஆகவும், ஒரு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்ட அவரை தற்போது ரூ.120 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ இஞ்சி கடந்த வாரம் ரூ.200 ஆக இருந்தது. தற்போது ரூ.240 ஆக உயர்ந்துள்ளது.

வரத்து குறைவு

பீட்ரூட் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.50 ஆகவும். மிளகாய் ஒரு கிலோ ரூ.120 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.140 ஆகவும் விற்பனை ஆகிறது. ஒரு கிலோ கோஸ் ரூ.25 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.40 ஆகவும் விற்கப்படுகிறது.

இதுகுறித்து காய்கறி மொத்த வியாபாரி கார்த்திக் கூறியதாவது:- இங்கிலீஷ் காய்கறிகள் வரத்து குறைவு காரணமாகவும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும் விலை உயர்ந்துள்ளது.

ஒட்டன்சத்திரத்தில் இருந்து வர வேண்டிய மிளகாய் உள்ளிட்டவைகளும் வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. பொதுவாக காய்கறி விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது என்றார்.

விலை குறைய வாய்ப்பு

மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயி முத்து கூறுகையில்,

தக்காளி சீசன் குறைந்ததால் விளைச்சலும் குறைந்து விட்டு. இதனால் தற்போது தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது கிலோ ரூ.80 முதல் ரூ. 100 வரை விற்பனை ஆகிறது.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு வரை தக்காளி கிலோ ரூ.40 முதல் ரூ. 50 வரை விற்பனை ஆனது. தற்போது தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. மழைக்காலம் தொடங்கியதும் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story