சாலையில் கிடந்த செல்போனை பெண்ணிடம் ஒப்படைத்த போலீஸ்காரர்


சாலையில் கிடந்த செல்போனை பெண்ணிடம் ஒப்படைத்த போலீஸ்காரர்
x
தினத்தந்தி 27 Jun 2023 7:07 PM GMT (Updated: 28 Jun 2023 10:41 AM GMT)

திருப்புவனம் சந்தை திடல் பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே சாலையில் கிடந்த செல்போனை பெண்ணிடம் போலீஸ்காரர் ஒப்படைத்தார்.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் சந்தை திடல் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் நேற்று போக்குவரத்து முதல்நிலை போலீஸ்காரர் கார்த்திகேயன் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த சமயம் சோதனை சாவடி அருகே திருப்புவனம் புதூரிலிருந்து ஆட்டோவில் வந்து இறங்கிய முஸ்லிம் பெண் ஒருவர் தனது ஸ்மார்ட் செல்போனை தவற விட்டுள்ளார். ரோட்டில் ஸ்மார்ட் செல்போன் கிடப்பதை பார்த்த போக்குவரத்து போலீஸ்காரர் அதை எடுத்து சோதனை சாவடியில் வைத்திருந்தார். அந்த ஸ்மார்ட் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. போக்குவரத்து போலீஸ்காரரிடம் பேசும்போது தொலைத்த பெண்ணே பேசியும் அது தனது செல்போன் என கூறியுள்ளார். போக்குவரத்து போலீஸ்காரர் விளக்கம் சொல்லி சோதனை சாவடியில் போன் உள்ளது என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதன் பிறகு 10 நிமிடங்கள் கழித்து அந்த பெண் வந்து தனது போன் எனக் கூறியும் கை ரேகை பதிவு செய்தவுடன் அந்த செல்போன் செயல்பட தொடங்கியது.

செல்போனை பெற்றுக் கொண்ட பெண் போக்குவரத்து போலீஸ்காரருக்கு நன்றி தெரிவித்து சென்றார். போக்குவரத்து போலீஸ்காரர் கார்த்திகேயனின் நேர்மையை பலரும் பாராட்டினர்.


Next Story