கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை சுத்தமல்லி பாரதியார் நகர் அருகே கருமாரியம்மன் நகரை சேர்ந்தவர் நவாஸ் கான். இவருடைய மனைவி ஆமினா பானு (வயது 38). நவாஸ்கான் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் நவாஸ்கான் மனைவியை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆமினா பானு சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பரமசிவன் வழக்குப்பதிவு செய்து நவாஸ்கானை கைது செய்து விசாரித்து வருகிறார்.


Next Story