சாக்கடைக்குள் பிணமாக கிடந்த மூதாட்டி


சாக்கடைக்குள் பிணமாக கிடந்த மூதாட்டி
x

சாக்கடைக்குள் பிணமாக மூதாட்டி பிணமாக கிடந்தார்.

திருச்சி

திருச்சி அய்யப்பன் கோவில் எதிரே சாக்கடைக்குள் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணமாக கிடந்தார். இது குறித்து திருச்சி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன்ராஜ், செசன்ஸ் கோர்ட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சேரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story