அச்சுறுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி


அச்சுறுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:46 PM GMT)

எஸ்.புதூர் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகங்கை

எஸ்.புதூர்

ஆபத்தான மேல்நிலை தொட்டி

எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது குரும்பலூர் கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் தற்போது ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. தொட்டியின் மேல் பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளது.

இடித்து அகற்ற கோரிக்கை

மேலும் தொட்டியின் கீழ் பகுதியில் உள்ள தூண்கள் முற்றிலுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த தொட்டி எப்போது இடிந்து விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் அதன் அருகில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது மழைக்காலம் வர உள்ளதால் எந்தவித அசம்பாவித சம்பமும் நடைபெறும் முன்பாக ஆபத்தான நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிய தொட்டியை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story