கூட்டுறவு வங்கியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை


கூட்டுறவு வங்கியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
x

கூட்டுறவு வங்கியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

நாகப்பட்டினம்

தலைஞாயிறு ஒன்றியம் ஆய்மூர் கூட்டுறவு வங்கியில் 545 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு நகைக்கடன், பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. கடன் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி கண்டித்து வங்கி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் கருணாநிதி தலைமையில் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து மற்றும் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து கூட்டுறவு துறை துணைபதிவாளர் பன்னீர்செல்வம், வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுெதாடா்பாக நடவடிக்கை எடுத்து நகைகள், பணம் மீட்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பெயரில் வரவு வைக்கப்படும். மேலும்

சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.


Next Story