அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்தது கண்டனத்திற்குரியது


அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்தது கண்டனத்திற்குரியது
x

அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்தது கண்டனத்திற்குரியது

தஞ்சாவூர்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி மற்றும் தேர் திருவிழா நடைபெறும் நாளில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் விரைவில் அறிவிக்க வேண்டும். வடமாநில தொழிலாளர் பற்றி பொய் பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவோம் என அறிக்கை கொடுத்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது. அண்ணாமலை கைது செய்யப்பட்டால் ஜனநாயகத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடியாக இருக்கும். அதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே தமிழக அரசு அண்ணாமலை மீது போட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் கார்த்திக் ராவ், நாகை மாவட்ட தலைவர் பார்த்திபன், தஞ்சை மாவட்ட செயலாளர் அனபாயன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story