வாடிக்கையாளருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்


வாடிக்கையாளருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
x

வாடிக்கையாளருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

திருவாரூர்

வாடிக்கையாளருக்கு மருத்துவ காப்பீட்டு தொகை வழங்க மறுத்த நிறுவனம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு

மன்னார்குடி அசேஷம் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பிரேமா. பிரேமாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 20.7.22 முதல் 24.07.22 வரை மன்னார்குடி பாலகிருஷ்ண நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார். இதற்கான செலவு ரூ.19,494-ஐ வழங்கக்கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்தும் காப்பீட்டுத்தொகை கொடுக்காததன் காரணமாக, ராஜேந்திரன் சென்னையில் காப்பீட்டு நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.50 ஆயிரம் இழப்பீடு

வழக்கை நுகர்வோர் ஆணையத்தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி ஆகியோர் விசாரித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது, புகார்தாரரின் மனைவி பிரேமாவுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 19,494-ஐ இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். புகார்தாரருக்கு எதிர்தரப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். வழக்கு செலவு தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும். இந்த உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 6 வார காலத்துக்குள் மேற்படி தொகைகளை புகார்தாரருக்கு வழங்க வேண்டும். தவறினால் வழக்கு செலவு தொகை நீங்கலாக மற்றவைகளுக்கு உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story