தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்


தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
x

மத்திய அரசை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 165 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

மத்திய அரசை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 165 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசை கண்டித்து போராட்டம்

விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்றவற்றுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், இந்தியை திணித்து தமிழை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். தேசியக்குழு உறுப்பினர் சிவபுண்ணியம் முன்னிலை வகித்தார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், குமரப்பா, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாலன், ராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், தண்டபாணி, கண்ணகி, நாராயணன், ராஜலட்சுமி, ஏ.ஐ.டி.யூ.சி. கைத்தறி மாநிலத்தலைவர் மணிமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

165 பேர் கைது

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அழகேசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 68 பெண்கள் உள்பட 165 பேரை கைது செய்தனர்.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து காய்கறிகளை மாலையாக அணிந்துகொண்டு தலைமை தபால் நிலையம் பகுதிக்கு ஊர்வலமாக வந்தனர்.


Next Story