பட்டாசு தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் முழு பாதுகாப்பு அளிக்கிறது


பட்டாசு தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் முழு பாதுகாப்பு அளிக்கிறது
x

பட்டாசு தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் முழு பாதுகாப்பு அளிக்கிறது என பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தினர் கூறினர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டம் நேற்று காலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். செயலாளர் ரவித்துரை முன்னிலை வகித்தார். பொருளாளர் சந்திர சேகரன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) தலைவர் கணேசன், தமிழ்நாடு பட்டாசு விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜாசந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது டான்பாமா தலைவர் கணேசன் பேசியதாவது,

சிவகாசியில் பட்டாசு தொழில் தொடங்கி 98 ஆண்டுகள் ஆகிறது. பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த காலங்களில் பட்டாசு தொழிலுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் இந்த தொழில் தற்போது மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் முழு பாதுகாப்பு அளிக்கிறது. பட்டாசு தொழிலை காக்க முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இது பாராட்டத்தக்கது. இதற்காக இந்த நேரத்தில் உங்கள் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கடந்த 25 ஆண்டுகளாக சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முடிவில் இளங்கோவன் நன்றி கூறினார்.

பட்டாசு தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் முழு பாதுகாப்பு அளிக்கிறது என பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தினர் கூறினர்.


Next Story