குண்டும், குழியுமான சாலையை புதுப்பிக்க வேண்டும்


குண்டும், குழியுமான சாலையை புதுப்பிக்க வேண்டும்
x

கூடலூர்-கோழிக்கோடு இடையே குண்டும், குழியுமான சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர்-கோழிக்கோடு இடையே குண்டும், குழியுமான சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

போக்குவரத்து அதிகம்

கூடலூரில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நெடுஞ்சாலை செல்கிறது. நீலகிரி மற்றும் கேரளா கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருள்களை ஏற்றி செல்லும் சரக்கு லாரிகள் அதிகளவு இயக்கப்படுகிறது.

இதேபோல் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பந்தலூர், கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். மேலும் பந்தலூர் தாலுகா மக்களின் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு கூடலூர் வந்து செல்கின்றனர். இதனால் கூடலூர்-கோழிக்கோடு சாலையில் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால் பல ஆண்டுகளாக சாலை மிகவும் குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது.

வாகன ஓட்டிகள் அவதி

இதனால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் இரவில் விபத்தில் சிக்கி வருகிறது. மேலும் மழைக்காலத்தில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் ஆபத்தான பள்ளங்களால் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து வருகின்றனர். இதனால் குண்டும், குழியுமாக கிடக்கும் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறும்போது, பல ஆண்டுகளாக கூடலூர்-கோழிக்கோடு சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது மிகவும் குண்டும் குழியுமாக மாறி விட்டது. அதிகாரிகள் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story