ஆலமரம் வேரோடு சாய்ந்தது


ஆலமரம் வேரோடு சாய்ந்தது
x

மயிலாடும்பாறை அருகே பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது.

தேனி

மயிலாடும்பாறை அருகே உப்புத்துறை கிராமத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில் அருகே சுமார் 60 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீடுகள் மேல் விழுந்தது. வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வந்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். மரத்தின் மற்றொரு பகுதி அந்த வழியாக சென்ற மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் 2 மின்கம்பங்கள் உடைந்தன. இதன் காரணமாக உப்புத்துறை கிராமத்தில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story