அ.தி.மு.க.வினர் சதி செய்து வீடியோ எடுத்து பரப்பினர்


அ.தி.மு.க.வினர் சதி செய்து வீடியோ எடுத்து பரப்பினர்
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:46 PM GMT)

அரசு பஸ்சில் மூதாட்டி வாக்குவாதம் செய்த சம்பவத்தில் அ.தி.மு.க.வினர் சதி செய்து வீடியோ எடுத்து பரப்பியதாக மதுக்கரை போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் புகார் செய்தனர்.

கோயம்புத்தூர்


அரசு பஸ்சில் மூதாட்டி வாக்குவாதம் செய்த சம்பவத்தில் அ.தி.மு.க.வினர் சதி செய்து வீடியோ எடுத்து பரப்பியதாக மதுக்கரை போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் புகார் செய்தனர்.

மூதாட்டி வாக்குவாதம்

கோவை காந்திபுரத்தில் இருந்து கண்ணம்மநாயக்கனூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் மதுக்கரையில் இருந்து பாலத்துறைக்கு செல்ல துளசியம்மாள் (வயது 70) என்ற மூதாட்டி ஏறினார். அவர் நான் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன், பணம் பெற்று டிக்கெட் கொடுங்கள் என்று கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதற்கு கண்டக்டர், பெண்களுக்கு பயணம் செய்ய இலவசம்தான் என்று எடுத்துக்கூறியும் மூதாட்டி கேட்காமல் தன்னிடம் இருந்த பணத்தை கண்டக்டரின் கையில் திணித்துடிக்கெட் வாங்கினார்.

போலீசில் புகார்

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. சார்பில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

திட்டமிட்ட சதி

மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர், வேண்டுமென்றே அந்த மூதாட்டியை பஸ்சில் பயணம் செய்ய வைத்து, கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்ய வைத்து உள்ளனர்.தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க.வினர் சதி செய்து திட்டமிட்டு வீடியோ எடுத்து பரப்பி உள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story