சென்னையில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் குறித்து சோதனை - 600 இடங்களில் மாதிரிகள் ஆய்வு


சென்னையில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் குறித்து சோதனை - 600 இடங்களில் மாதிரிகள் ஆய்வு
x

சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை சோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக்காலங்களில் குடிநீர் மூலம் நோய்த் தொற்று பரவாமல் இருக்கும் வகையில், சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தினமும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தொற்று நோய் பரவாமல் இருக்க சுமார் 12 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. குடிநீரை பயன்படுத்துவதற்கு முன்பு 15 லிட்டர் குடிநீரில் ஒரு குளோரி மாத்திரையை கலந்து இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அளவுக்கு அதிகமான குடிநீரை பொதுமக்கள் சேமித்து வைக்க வேண்டாம் என சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Next Story