ராஜபாளையம் மலையில் பயங்கர தீ


ராஜபாளையம் மலையில் பயங்கர தீ
x

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

விருதுநகர்

ராஜபாளையம்.

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

பயங்கர தீ

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வனச்சரகமானது, அய்யனார் கோவில், வாளைகுளம், ராஜாம்பாறை, அம்மன் கோவில், நீராவி, கோட்டைமலை, பிறாவடியார், நவலூத்து, தேவியாறு, சாஸ்தா கோவில் ஆகிய பீட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் உள்ள நீராவி பீட் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திடீரென காட்டு தீப்பற்றி வனப்பகுதியில் வேகமாக பரவி வருகிறது. பலத்த காற்றின் காரணமாக தீ பரவும் வேகம் அதிகமாக உள்ளது.

மூலிகை செடிகள்

இதனால் ஏராளமான மரங்கள், அரிய வகை மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. காட்டுத்தீயால் புலிகள் மட்டுமின்றி காட்டெருமை, யானை, மான், மிளா, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் வேதனையுடன் கூறினர்.

தற்போது பரவி வரும் தீயை கட்டுப்படுத்த தீ தடுப்பு மற்றும் வனக்காவலர்கள் அடங்கிய குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், தீ பரவும் வேகத்துக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தொடர்ந்து போராடி வருகின்றனர்.


Related Tags :
Next Story