வைணவ கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி வழிபாடு


வைணவ கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி வழிபாடு
x

திருவாரூர் மாவட்ட வைணவ கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

திருவாரூர் மாவட்ட வைணவ கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ண ெஜயந்தி

கிருஷ்ணஜெயந்தியையொட்டி திருவாரூர் மாவட்ட வைணவ கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூத்தாநல்லூர் அருகே உள்ள, அதங்குடியில் வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாமா, ருக்மணி, கோபாலகிருஷ்ணன் சன்னதி உள்ளது. இக்கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பாமா, ருக்மணி, கோபாலகிருஷ்ணனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பாமா, ருக்மணி, கோபாலகிருஷ்ணன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சாமி வீதிஉலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவைமுன்னிட்டு அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவில் சத்யபாமா, ருக்மணி ராஜகோபாலன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டையில் உள்ள ரங்கநாத பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருமக்கோட்டை அருகே உள்ள கன்னியாகுறிச்சி ஒத்தக்கடையில் வீற்றிருக்கும் கிருஷ்ணன் கோவிலில் காலையில் இருந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story