சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு


சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
x

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு;

திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் புதனின் பரிகார ஸ்தலமாகும். இக்கோவிலில் சிவபெருமானின் முக்கண்களில் இருந்து விழுந்த தீப்பொறியிலிருந்து விழுந்த பொறிகள் பட்ட இடத்தில் 3 குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இங்கு சிவபெருமான் அகோர மூர்த்தி சுவாமியாக அருள்பாலிக்கிறார். காசிக்கு இணையான 6 கோவில்களில் முதன்மையாக இக்கோவில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நந்தி பகவானுக்கு சனி பிரதோஷத்தையொட்டி மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழிபாடு ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், அர்ச்சகர்கள் ராஜப்பா சிவாச்சாரியார், பட்டாபிராமன் சிவாச்சாரியார் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story