கோதண்டராமர் கோவிலில் சாமிகளுக்கு கவசம் அணிவித்தல்


கோதண்டராமர் கோவிலில் சாமிகளுக்கு கவசம் அணிவித்தல்
x

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் சாமிகளுக்கு கவசம் அணிவித்தல் நடந்தது

திருவாரூர்

வடுவூர்;

வடுவூரில் மிகவும் புகழ்பெற்ற கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரை 30 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். திருமஞ்சனம் நிறைவடைந்ததை தொடர்ந்து சாமிகளுக்கு நேற்று இரவு கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.முன்னதாக உற்சவர் சாமிகளை மூலவர் சன்னதியின் முன்பு எழுந்தருளச் செய்தனர். கோதண்ட ராமர், சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சாமிகள் மற்றும் கோவிலில் சாமிகளுக்கு ஆண்டவன் ஆசிரமம் சார்பில் கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் கோவிலில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத கோபாலன், ஆண்டாள், ஹயக்ரீவர் மற்றும் ஆழ்வார்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு அவர்களுக்கும் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அலுவலர் மாதவன், வேத பாடசாலை முதல்வர் கோவிந்தன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story