அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் ேதரோட்டம் இன்று


அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் ேதரோட்டம் இன்று
x

அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் ேதரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தேரில் எழுந்தருளிய சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

திருப்பூர்

பிரசித்தி பெற்ற அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் ேதரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தேரில் எழுந்தருளிய சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தேர்த்திருவிழா

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பிரசித்தி பெற்ற கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாக இந்த கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த 25-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 29-ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்கள் காட்சியளித் த வைபவம் நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கற்பகவிருட்சம், திருக்கல்யாணம், யானை வாகன காட்சி ஆகியவை நடந்தது. யானை வாகனத்தில் சாமி எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இன்று தேரோட்டம்

இன்று (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைக்கப்பட்டு சிறிது தூரத்தில் நிறுத்தப்படுகிறது. நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மீண்டும் தேர் இழுத்து நிலை சேர்க்கப்படுகிறது. வருகிற 4-ந்தேதி அம்மன் தேர் (சிறிய தேர்) இழுக்கப்படுகிறது.

முன்னதாக நேற்று அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. காலை 5.40 மணியளவில் பூர நட்சத்திரத்தில் அதிர்வேட்டுகள், மேளதாளம் முழங்க பெரிய தேருக்கு உமாமகேஸ்வரி சோமஸ்கந்தரும், சிறிய தேருக்கு கருணாம்பிகை அம்மனும் எழுந்தருளினர்.

பக்தர்கள் சாமி தரிசனம்

தேரில் வீற்றிருக்கும் சாமியை தரிசனம் செய்ய நேற்று காலை முதல் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்து நின்று தேரின் மீது ஏறி சென்று சாமியை தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story