அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா


அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று  மகா சிவராத்திரி விழா
x

அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) இரவு மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

திருப்பூர்

அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) இரவு மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

மகா சிவராத்திரி மகிமை

சக்திக்கு ஒன்பது ராத்திரி 'நவராத்திரி' என்பது போல சிவனுக்கு ஒரு ராத்திரி 'மகா சிவராத்திரி' என்பது ஐதீகம். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு தனி சிறப்பு உண்டு. இந்த நாளுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. இந்த ஆண்டுக்கான சிவராத்திரி எந்த ஆண்டும் இல்லாத ஒரு விஷேசமாக, மகா சிவராத்திரியன்றே சனிப்பிரதோஷமும் வந்துள்ளது. எனவே இன்று நடக்கும் மகா சிவராத்திரி மிகவும் சக்தி வாய்ந்தது என்று கருதப்படுகிறது.

சனிப்பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி 2-ம் அரிதாக ஒன்றிணையும் இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டு வந்தால் நாள்பட்ட நோய்களும் தீரும், தோஷங்கள் நிவர்த்தியாகும், கடன் தொல்லை நீங்கும், வாழ்க்கையில் உன்னதமான நிலையை அடைய முடியும் என கூறப்படுகிறது. பார்வதிதேவி நீண்ட காலம் கடும் தவமிருந்து, ஈசனை அடைந்த தினம் தான் மகா சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது.

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

சிவராத்திரி விரத முறைகளை நெறியோடு பின்பற்ற வேண்டும். மகா சிவராத்திரியன்று அதிகாலையில் குளித்துவிட்டு சிவாலயம் சென்று சிவனை தரிசிக்க வேண்டும். சிவன் கோவிலுக்குச் சென்று விளக்கு போட வேண்டும். பழங்கள், இனிப்புகளை சிவபெருமானுக்கு படையலாக இடலாம். சிவபுராணம் படிக்க வேண்டும்.

அன்று காலை முதல் விரதம் இருந்து மாலையில் உலர் பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டு சிவராத்திரி விரதத்தை முடிக்கலாம். கோதுமை பண்டங்களும் உட்கொள்ளலாம். ஆனால் எதிலும் உப்பு சேர்க்கக்கூடாது.

சிவராத்திரி என்பது சிவனின் ராத்திரி. இன்றைய நாள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரியன்று இரவில் 'ஓம் நமசிவாய' என்ற 6 எழுத்து மந்திரத்தை உச்சரித்து சிவனை பூஜிப்பவர்கள் மஹாமிருதஞ்சய் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் எல்லா நோயும் நீங்கி நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) இரவு மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி விழாவானது கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், முதலை உண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி உயிருடன் மீட்டெடுத்ததும், காசிக்கு நிகரான கோவில் என்ற பல சிறப்புகள் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில்.

இந்த கோவிலில் இன்று (சனிக்கிழமை) இரவு மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு சனிப்பிரதோஷ பூஜை, இரவு 8 மணிக்கு முதற்கால பூஜை, இரவு 10.30 மணிக்கு 2-ம் கால பூஜை, நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜை, அதிகாலை 3.30 மணிக்கு 4-ம் கால பூஜை ஆகியன நடைபெற உள்ளது.


Related Tags :
Next Story