சிவாலயங்களில் சனிப்பிரதோஷ விழா


சிவாலயங்களில் சனிப்பிரதோஷ விழா
x

உடுமலை பகுதியில் உள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

திருப்பூர்

உடுமலை பகுதியில் உள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

சனிப்பிரதோஷம்

சிவாலயங்களில் நடைபெறும் விழாக்களில் சனிப்பிரதோஷமும் ஒன்று. அந்த வகையில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகரில் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி மாத சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து சிவபெருமானுக்கும் 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிவபெருமான் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின்பு ரத்தினலிங்கேஸ்வரர் ரத்தினாம்பிகை அம்மனுடன் பல்லக்கில் எழுந்தருளி மங்கள வாத்தியம் சங்கொலி முழங்க கோவில் வளாகத்தில் ஊர்வலம் வந்து தம்பதி சகிதமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சிறப்பு பூஜை

அதைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதையடுத்து சிவபெருமான் நந்தியம்பெருமானுக்கு பூஜை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சிவபெருமானை பஞ்சாட்சர மந்திரம் கூறி பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர். இதே போல் சனிப்பிரதோசத்தை முன்னிட்டு உடுமலை பகுதியில் உள்ள சிவாலயங்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனால் கோவில்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.


Related Tags :
Next Story