சங்கராபுரம் பகுதி கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
சங்கராபுரம் பகுதியில் உள்ள கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்.
சங்கராபுரம் அருகே உள்ள மஞ்சபுத்தூரில் காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போன்று சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர் கோவில், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story