புதுக்கோட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை 30-ந் தேதிக்குள் கட்ட வேண்டும்-கமிஷனர் எச்சரிக்கை


புதுக்கோட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை 30-ந் தேதிக்குள் கட்ட வேண்டும்-கமிஷனர் எச்சரிக்கை
x

புதுக்கோட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை 30-ந் தேதிக்குள் கட்ட வேண்டும் என நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1½ லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் வணிகவளாகம் மற்றும் கடைகள் உள்ளன. இந்தநிலையில் புதுக்கோட்டை நகராட்சியில் ஆண்டுக்கு இருமுறை அரையாண்டு வீதம் வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு வரை சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளுக்கு செலுத்த வேண்டிய தொகை என ரூ.10 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. மேற்காணும் நிலுவை தொகையினை நகராட்சி நிதிநிலைமையை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பணிமேற்கொள்ளவும் வருகிற 30-ந் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்டை நகராட்சி கமிஷனர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story