தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாடு


தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாடு
x

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாடு ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.

அரியலூர்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட மாநாடு ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அறிக்கையை செயலாளர் பழனிவேலும், நிதி நிலை அறிக்கையை பொருளாளர் முருகானந்தமும் வாசித்தனர். மாநாட்டில், அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டிப்பது. மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டுள்ள தற்காலிக பணிநீக்கம் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித தண்டனைகளும் இல்லாமல் ரத்து செய்ய வேண்டும். ஆய்வுக்கூட்டங்களை விடுமுறை நாட்களிலும், மாலை 6 மணிக்கு மேலும் நடத்தக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி மாவட்ட கலெக்டரிடம் முறையீடு செய்வது என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 6-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் பாரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன், மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட துணை தலைவர் சி.பி.ராஜா வரவேற்றார். முடிவில் சிந்தனைச்செல்வி நன்றி கூறினார்.


Next Story