தமிழக வீரர், வீராங்கனைக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் - அமைச்சர் உதயநிதி வழங்கினார்


தமிழக வீரர், வீராங்கனைக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் -  அமைச்சர் உதயநிதி வழங்கினார்
x

தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டை சேர்ந்த தேசிய சைக்கிள் பந்தய வீரர் பிரதீப் சங்கருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக ரூ,16 லட்சம் மதிப்பிலான சர்வதேச தரத்திலான சைக்கிளையும், வில்வித்தை வீராங்கனை கண்மணிக்கு ரூ,2.8 லட்சம் மதிப்பிலான வில்வித்தை உபகரணத்தையும், உலக பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகாராஜாவுக்கு அமெரிக்காவில் உயர்தர பயிற்சி பெற ரூ,1.20 லட்சத்திற்கான காசோலையையும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்த உதவி அளிக்கப்பட்டது.


Next Story