தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு கூட்டம்


தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு கூட்டம்
x

தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி

தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் 3-ம் ஆண்டு தொடக்க விழா திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமையில் நடந்தது. நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அன்பழகன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ராம்குமார் நிதிநிலை அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு கவுரவத் தலைவர் பாக்யா கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர்கள் விமல் குமார் ஜெயின், ராஜேந்திரன், துணை செயலாளர் அருட் செல்வம், இணைச் செயலாளர் ராஜ் விமல், மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், புறநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், செய்தி தொடர்பாளர் செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர் வினோத், வழக்கறிஞர் சுந்தர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு சிறப்புரையாற்றினார். முடிவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவரும், தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு தலைவருமான எஸ்.கந்தன் நன்றி கூறினார். கூட்டத்தில் திருட்டு நகைகள் பிரச்சினைகளில் காவல்துறையின் அணுகுமுறையில் சீர்திருத்தம் செய்ய குழுவை நியமிப்பது, செயல் தலைவராக எஸ்.ஆர்.வி.கண்ணனை நியமிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story